ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா

ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா

ஐயப்பன் கோவிலுகு வரும் பெண்கள் பக்தியுடன் வருமாறு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் ஆலய மீட்பு குழு நிர்வா​கிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த எச்.ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சுப்ரீம் கோர்ட் அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனால் விரதம் இருக்காமல் இருமுடி கட்டாமல் அதற்குரிய உடை அணியாமல் செல்லலாம் என்று கூறவில்லை. எனவே ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள் முதலில் பக்தியுடன் வாருங்கள் பின்னர் பார்த்து கொள்ளலாம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தை தீய சக்திகள் அழிக்க நினைக்கின்றது. அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

Leave a Reply