ஐயப்பன் கோபத்திற்கு ஆளாகிவிட்டார் பினராயி: காங்கிரஸ்-பாஜக குற்றச்சாட்டு

ஐயப்பன் கோபத்திற்கு ஆளாகிவிட்டார் பினராயி: காங்கிரஸ்-பாஜக குற்றச்சாட்டு

சபரிமலை ஐயப்பனின் கோபத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆளாகிவிட்டதாக காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

எந்த ஒரு விஷயத்திற்கும் எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சி தலைவர்கள் சபரிமலை விஷயத்தில் மட்டும் ஒத்த கருத்துடன் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

அந்த வகையில் நேற்று சபரிமலையில் இரு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்தது குறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறும்போது, சபரிமலையில் காவல்துறையின் பாதுகாப்புடன் பெ‌ண்கள் தரிசனம் செய்துள்ளது ஏராளமான பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக மாநிலமெங்கும் காங்கிரஸ் கட்சி போராட்டங்களை மீண்டும் தொடக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் கேரல மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை இதுகுறித்து கூறியபோது, ‘கம்யூனிஸ்ட் தலைவர்களும் அவர்களின் சந்ததிகளும் ஐயப்பனின் கோபப் பார்வைக்கு ஆளாவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply