ஐபிஎல் போட்டியிலாவது தோனிக்கு இடம் உண்டா? சிஎஸ்கே உரிமையாளரின் பதில்

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தல தோனி கிட்டதட்ட நீக்கப்பட்டு விட்டார் என்றே கூறலாம். எதிர்வரும் எந்த தொடரிலும் தோனியின் பெயர் இல்லை என்பதால் அவர் நீக்கப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் தான் இல்லை குறைந்தபட்சம் ஐபிஎல் தொடரில் ஆவது தோனி இருப்பாரா என்ற கேள்வி தோனியின் ரசிகர்கள் மனதில் இருந்தது

இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் ’தோனி இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார் என்று பலர் கேட்கிறார்கள். அவர் விரும்பும் வரை அவர்தான் சிஎஸ்கே கேப்டன். இந்த ஆண்டு மட்டுமன்றி அடுத்த ஆண்டு அவர்தான் சிஎஸ்கே கேப்டனாக விளையாடுவார் என்று கூறியுள்ளார். சீனிவாசன் அவர்களின் இந்த பதிலால் தோனியின் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

Leave a Reply