ஐபிஎல் போட்டிக்காக அட்டவணையை மாற்ற முடியாது: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிக்காக இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் டெஸ்ட் போட்டி அட்டவணையை மாற்ற முடியாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு நாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ள நிலையில் இதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் போட்டிகளை முன்கூட்டியே முடிக்கும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்பட்டது

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிக்காக இந்தியா இங்கிலாந்து தொடரில் அட்டவணையை மாற்ற முடியாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது