ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் இருந்து மாற்றமா?

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் இருந்து மாற்றமா?

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் பாரளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் போட்டிகள் வெளிநாட்டில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றது. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டும் தேர்தல் நடைபெறுவதால், ஐ.பி.எல். போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், போட்டிகள் வெளிநாடுகளுக்கு மாற்றுப்படலாம் என தெரிகிறது.

ஆனால், இந்த முடிவுக்கு ஐ.பி.எல். அணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிநாடுகளில் போட்டி நடத்தினால், கூடுதல் செலவு ஏற்படும் என கூறியுள்ளன. ஐ.பி.எல். போட்டியை முன் கூட்டியே நடத்துவது மற்றும் முக்கிய தலைவர்களின் முக்கிய பிரச்சார நாளில் போட்டியை நடத்தாமல் இருப்பது போன்ற யோசனைகளை பி.சி.சி.ஐ. ஆலோசித்து வருகிறது. இருப்பினும் போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்பவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன

 

Leave a Reply