ஐபிஎல் பெட்டிங்: 18 பேர் கைது, பணம், மொபைல் போன் பறிமுதல்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பெட்டிங் நடப்பதாக காவல்துறையினருக்கு அவ்வப்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் பெட்டிங் நடப்பதாக வந்த தகவலை அடுத்து அதிரடியாக போலீசார் சோதனை செய்தனர்

இந்த சோதனையில் 18 பேர் பெட்டிங்கில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்

மேலும் அவர்களிடமிருந்து 17 மொபைல் போன்கள் மற்றும் சுமார் 7 லட்சம் ரூபாய் ரொக்கம் டிவி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்து மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது 

Leave a Reply