ஐபிஎல் எப்போது தொடங்கினாலும் தல தோனி தயாராக இருக்கிறார்:

சுரேஷ் ரெய்னா

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கினாலும் தல தோனி தயாராக இருக்கிறார் என்றும் அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார் என்றும் அவர் சோர்வடையும் வாய்ப்பே இல்லை என்றும் பேட்டி ஒன்றில் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் ரெய்னா ’ஐபிஎல் போட்டிக்காக சென்னையில் 2 மணி முதல் 4 மணி வரை பயிற்சி பெற்றதாகவும் அந்தப் பயிற்சியின்போது தோனி கொஞ்சம் கூட சோர்வு அடையவில்லை என்றும் தெரிவித்தார்

மேலும் தல தோனி அவர்கள் முழு உடற்தகுதியுடன் இருப்பதால் ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கினாலும் அவர் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார் என்றும் அவருடைய உடலிலும் மனதிலும் அப்படி ஒரு தெளிவை கண்டேன் என்றும் சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்

இருப்பினும் ஐபிஎல் போட்டி போட்டி எப்போது தொடங்கும் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை என்பதும், ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply