ஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:

இந்திய இளைஞரின் சாதனை

பணம் எடுக்க ஏ.டி.எம் பயன்படுவது போல் இனி பானிபூரியும் ஏடிஎம்.-இல் கிடைக்கும் வகையில் ஒரு மிஷினை இந்தியர் கண்டுபிடித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த பாரத்பாய் விகாபாய் பிரஜாபதி என்ற இளைஞர் ‘பானி பூரி ஏடிஎம்’மை தயாரித்துள்ளார்.

இந்த ஏ.டி.எம் மிஷினில், ரூ.20 நோட்டை உள்ளே செலுத்தினால், கன்வேயர் பெல்ட் மூலம் பூரியுடன் பானி, உருளைக்கிழங்கு சேர்த்த கலவை வரிசையாக வரும்.

இதனை அப்படியே எடுத்து சாப்பிடலாம். கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் மக்கள் பயமின்றி பானி பூரி சாப்பிட இந்த மிஷின் உதவும் என பிரஜாபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply