ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கும் ஷாருக்கான்

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கும் ஷாருக்கான்

பிரபல இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே ‘லீ மஸ்க்’ என்ற வெர்ட்சுவல் ரியாலிட்டி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னொரு மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கவுள்ளதகவும், இதில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான புரமோஷன் பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்து இயக்க, இதில் ஷாருக்கான் நடிக்கவுள்ளார். இந்த பாடல் ‘ஜெய் ஹிந்த் ஹிந்த், ஜெய் இந்தியா என்ற டைட்டிலில் உருவாகவுள்ளது. ஏற்கனவே ஜெய்ஹோ, வந்தே மாதரம், செம்மொழி உள்பட பல தனிப்பாடல்களை ஆல்பமாக கம்போஸ் செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ஹாக்கி புரமோஷன் பாடல் மிகபெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.