ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் இணைந்து இசையமைக்கும் படம்!

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்க இருக்கும் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் இணைந்து இசையமைக்க உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

ஷாருக்கான் அட்லீ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே டீசர் தயாராகி விட்டது என்றும், இந்த டீசருக்கு பின்னணி இசை அனிருத் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக செய்தி வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் பாடல் கம்போஸ் செய்து கொடுப்பார் என்றும் அனிருத் பின்னணி இசையை அமைத்துக் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.