ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் வெங்கட்பிரபுவின் 2 படங்கள்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதத்திலும், அவர் இயக்கி வந்த திரைப்படமான ‘பார்ட்டி’ திரைப்படம் வரும் மே மாதத்திலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் ‘ஆர்கே.நகர்’ திரைப்படம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் வரும் கோடை விடுமுறையில் ‘பார்ட்டி’ வெளியாகும் என ஏற்கனவே அவர் உறுதி செய்திருந்தர் என்பது தெரிந்ததே

வைபவ், சனா அல்தாப், சம்பத்ராஜ், அஞ்சனா கிர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு அரசியல் நையாண்டி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply