ஏடிஎம் கார்டு வைத்திருந்தால் ரூ.1 லட்சம்: இது யாருக்காவது தெரியுமா?

ஏடிஎம் கார்டு வைத்திருந்தால் ரூ.1 லட்சம்: இது யாருக்காவது தெரியுமா?

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு ரூபாய் ஒரு லட்சம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிதிசார் கல்வி மைய ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் பலருக்கும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்

தற்போது ஏடிஎம் கார்டு இல்லாதவர்கள் இருக்க முடியாது என்ற நிலையில் அந்த ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் உயிரிழந்த உயிரிழந்து விட்டால் அவர்களுக்கு மத்திய அரசு உருவாகி ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்குகிறது என்று அவர் கூறினார்

விபத்தில் உயிர் இழக்கும் நபர் எந்த வங்கியின் அடையாள அட்டை வைத்திருக்கிறாரோ அந்த வங்கி மூலம் இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் இது பலருக்கும் தெரியாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்

இதனை அடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உயிரிழந்தவர் எந்த வங்கியில் கணக்கு வைத்து இருக்கின்றாரோ அந்த வங்கிக்கு சென்று இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்தை பெறலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.