எஸ்பிபிக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லையா அஜித்? பரவும் வதந்தி பிரபல

பின்னணி பாடகர் எஸ் பி பி அவர்கள் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்

இந்த நிலையில் எஸ்பிபியால் முதன்முதலில் சினிமா வாய்ப்பை பெற்ற அஜித் குறிப்பாக அவருடைய மகனான எஸ்பி சரணின் நெருங்கிய நண்பரான அஜித் எஸ்பிபிக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நெட்டிசன்களிடம் இருந்து வருகிறது

ஆனால் உண்மையில் அஜித், எஸ்பிபி சரண் அவர்களுக்கு எஸ்பிபி இறந்த செய்தி வெளியான அடுத்த நிமிடமே தனது இரங்கலை தெரிவித்து விட்டதாகவும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் போனில் அவர் ஆறுதல் கூறியதாகவும் ஆனால் அதனை விளம்பரப்படுத்த விரும்பாமல் அவர் அமைதியாக இருப்பதாகவும் அஜித் வட்டாரங்கள் கூறுகின்றன

எந்த ஒரு செயலையும் விளம்பரப்படுத்தாமல் கேமரா முன் நடிப்பதை அஜித் விரும்பமாட்டார் என்றும் அஜித் இரங்கல் தெரிவித்தாரா? இல்லையா? என்பது எஸ்பிபியின் குடும்பத்தினர்களுக்கு தெரியும் என்றும், எஸ்பிபி மீது அஜித் வைத்திருக்கும் மரியாதை எவ்வளவு என்பது சரண் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என்றும் அஜித் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.