எல்லோரும் மாஸ்க் அணிந்துவிட்டால் கொரோனா மறைந்துவிடுமா?

அமெரிக்க அதிபர் கேள்வி

கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார அமைச்சகம் வரை வலியுறுத்தி வருகிறது.

ஆனால் அமெரிக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமென உத்தரவிட முடியாது என்றும், அமெரிக்க மக்களுக்கு தனிச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் உலகில் உள்ள எல்லோரும் மாஸ்க் அணிந்துவிட்டால் கொரோனா மறைந்துவிடும் என்பதை ஏற்கமுடியாது என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மாஸ்க் அணிதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.