எல்லாமே விஜய் அண்ணா.. பிறந்த நாளில் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

2017ம் ஆண்டு சந்தீப் கிஷான், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி திரைபிரலங்களை நடிக்கவைத்து புதிய அத்தியாயம் படைத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பல இந்திய திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லோகேஷ் தனது சமூக வலைதளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘எல்லாவற்றிற்கும் மிகவும் நன்றி விஜய் அண்ணா’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.