“எம்.பி.ஏ படித்த 93 சதவீதம் பேருக்கு வேலையில்லை”- ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..!

“எம்.பி.ஏ படித்த 93 சதவீதம் பேருக்கு வேலையில்லை”- ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..!

இந்தியாவில் எம்.பி.ஏ படித்த 93 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

அசோசெம் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தியாவின் முக்கிய மேலாண்மை கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.எம் போன்றவற்றை தவிர, மீதமுள்ள அனைத்து மேலாண்மை பள்ளிகளில் படித்த பெரும்பாலான எம்.பி.ஏ பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு வேளை அவர்களுக்கு வேலை கிடைத்தாலும், மிகக் குறைந்த ஊதியமே அளிக்கப்படுகிறது. பெரும்பாலான எம்.பி.ஏ பட்டதாரிகள் 10,000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார்களாம்.” இந்தியாவில் உள்ள மேலாண்மை கல்லூரிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, திறமையில்லாத ஆசிரியர்கள், தரமின்மை போன்ற காரணங்களினால் பல எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில்லை.” என அசோசெம் ஆய்வு தெரிவிக்கிறது.

”கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், டெல்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் செயல்பட்டு வந்த 220-க்கும் மேற்பட்ட மேலாண்மை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 120 கல்லூரிகள் மூடப்படும் என எதிர்பார்க்கிறோம்.” என அசோசெம் தெரிவித்துள்ளது.

Leave a Reply