எம்.டெக் கல்விக்கட்டணம் 10 மடங்கு உயர்வு: மாத உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி

எம்.டெக் கல்விக்கட்டணம் 10 மடங்கு உயர்வு: மாத உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி

எம்.டெக் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை 10 மடங்கு உயர்த்துவதற்கு ஐஐடி கவுன்சில் முடிவு செய்துள்ளதோடு, மாணவர்களுக்கான மாத உதவித் தொகையும் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐஐடியில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வர அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் எம்.டெக் படிப்புக்கான கல்விக்கட்டணம் 10 மடங்கு வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் கேட் தேர்வு எழுதி அதன் மூலம் எம்.டெக் படிப்பில் சேர்ந்தவர்களுக்கான மாத உதவித் தொகை 12 ஆயிரத்து 400 ரூபாயையும் நிறுத்த ஐஐடி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் தற்போது எம்.டெக் படிப்புக்கு முதல் பருவத்திற்கு, 8,750 ரூபாயும், அடுத்தடுத்த பருவங்களுக்கு 5,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply