எம்.ஜி.ஆர்-சிவாஜி நடித்த கூண்டுக்கிளி படத்தின் நாயகி காலமானார்

எம்.ஜி.ஆர்-சிவாஜி நடித்த கூண்டுக்கிளி படத்தின் நாயகி காலமானார்
மக்கள் திலகம் எம்ஜிஅர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தில் நடித்த குசல்குமாரி இன்று காலமானார். இந்த படத்தில் குசலகுமாரி. எம்ஜிஆரின் தங்கையாகவும் சிவாஜியின் காதலியாகவும் நடித்திருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. வி
‘பராசக்தி’, ‘கொஞ்சும் சலங்கை’, ‘ஹரிச்சந்திரா’ உள்பட பல தமிழ் படங்களிலும், பிரேம் நசீர், நாகேஸ்வரராவ் உள்பட முன்னணி நடிகர்களுடன் பல தெலுங்கு படங்களிலும் நடித்த குசேலகுமாரி கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருடைய் வறுமையை அறிந்து மாதம் ரூ.5000 உதவித்தொகை  வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply