எம்பிக்கள் ஜோதிமணி, செந்தில்குமார் கைது செய்யப்பட வேண்டும்: ஹெச்.ராஜா

எம்பிக்கள் ஜோதிமணி, செந்தில்குமார் கைது செய்யப்பட வேண்டும்: ஹெச்.ராஜா

சிஏஏ போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்களும் திமுக எம்.பி செந்திலும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ஜோதிமணி தனது டுவிட்டரில், ‘அமைதி வழியில் போராடுவது ஒவ்வொரு இந்தியரின் உரிமை. இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு கொலைகார சட்டத்தை எதிர்த்து வண்ணாரப்பேட்டையில் அமைதிவழியில் போராடிய இஸ்லாமிய சகோதர ,சகோதரிகள் மீது வன்முறையை ஏவி ஒரு உயிரைப் பறித்த பிஜேபியின் அடிமை அதிமுக அரசை கடுமையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் டாக்டர் செந்தில்குமார் எம்பி, சிஏஏ போராட்டத்தில் ஒருவர் மரணம் அடைந்ததாக குறிப்பிட்டு பின்னர் தவறான தகவலுக்கு வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply