எம்ஜிஆரின் வாரிசை அவமதித்த சரவணன்! ரமேஷ் கண்ணா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனை சரவணன் மரியாதையின்றி பேசியது அனைவரும் அறிந்ததே. சரவணனின் இந்த பேச்சை கண்டித்த நடிகர் ரமேஷ் கண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனை சரவணன் தரக்குறைவாகவும் மரியாதைக்குறைவாகவும் பேசியது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேரன் வயது சரவணணின் வயதை விட அதிகமோ, குறைவோ எனக்கு தெரியாது. ஆனால் சேரனின் படைப்புகள் மிக அபாரமானது. அவரது ‘பொற்காலம்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘ஆட்டோகிராப்’ போன்ற குடும்ப பின்னணி உள்ள படங்கள் விருதுகள் பெற்றதோடு சேரனை ஒரு உயர்வான இடத்தில் நிறுத்தியது. ஒரு மரியாதைக்கு உரிய இயக்குனரை இவ்வாறு பொதுமக்கள் மத்தியில் ‘வாடா போடா’ என்று பேசும் போது உங்களுடைய மரியாதை குறைகிறது. ஏற்கனவே சரவணன் டென்ஷன் ஆனவர் என்பது எனக்கு தெரியும். சரவணனுடன் நான் ஒருசில படங்களில் பணி புரிந்துள்ளேன். அவருக்கு கோபம் அதிகம் வரும் என்பது எனக்கு தெரியும். ஒருமுறை பாக்கியராஜ் ஒரு நடிகரே இல்லை என்று கூறியவர் தான் சரவணன். புரட்சித் தலைவரால் தனது கலையுலக வாரிசு என்று கூறப்பட்ட பாக்யராஜை அவர் நடிகரே இல்லை என்று கூறியவர் சரவணன்

எனவே சரவணன் கொஞ்சம் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்கு மரியாதை கொடுத்து ‘வாங்க போங்க’ என்று பேசுவது தான் தமிழரின் பண்பாக உள்ளது. அந்த பண்பை சரவணனும் கற்றுக்கொண்டு சேரனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்

இவ்வாறு ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Leave a Reply