எம்ஜிஆரின் ‘அன்பே வா’ ரீமேக்கில் அஜித்-நயன்தாரா

எம்ஜிஆரின் ‘அன்பே வா’ ரீமேக்கில் அஜித்-நயன்தாரா

எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த ‘அன்பே வா’ திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித், நயன்தாரா நடிக்கவிருப்பதாக் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் ஒரு தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

எம்ஜிஆர், சரோஜாதேவி நடிப்பில் ஏவிஎம் தயாரிப்பில் ஏசி திருலோகசந்தர் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கடந்த 1966ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அன்பே வா. சூப்பர் ஹிட் பாடலுடன் கூடிய ரொமான்ஸ் படமான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் அஜித், நயன்தாரா நடிப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அஜித் தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை

Leave a Reply