என் மகனை மன்னித்து உயிர்ப்பிச்சை கொடுங்கள்: நிர்பயா தாயிடம் கெஞ்சிய குற்றவாளியின் தாய்!

என் மகனை மன்னித்துவிடுங்கள், என் மகனுக்கு உயிர்பிச்சை கொடுங்கள் என குற்றவாளி முகேஷ் தாய், நிர்பயா தாயிடம் கெஞ்சிய சம்பவம் நேற்று நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நிர்பயா கொலையாளிகள் வரும் 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என நேற்று நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்த நிலையில் இந்த உத்தரவைக் கேட்டு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் தாய் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் அவர் நேராக நிர்பயா தாயிடம் சென்று ’என் மகனை தயவு செய்து மன்னித்து விடுங்கள், என் மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடுங்கள், உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்

ஆனால் அதற்கு நிர்பயா தாய், ‘எனக்கும் ஒரு மகள் இருந்தாள், ஆனால் அவள் இன்று இல்லை, என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த நீதிக்காக நான் ஏழு வருடங்கள் காத்திருந்தேன்’ என்று கூறியதும் நேராக அந்த தாய் நீதிபதியிடம் சென்று ’என் மகனை மன்னித்து அவரை விடுதலை செய்யுங்கள் என்று கெஞ்சினாள். ஆனால் நீதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு, நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *