என் அருமை நண்பர் திரு.வசந்தகுமார்…

ரஜினிகாந்த் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் எம்பியும், தொழிலதிபரும், நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் சற்று முன்னர் கொரோனாவுக்கு பலியானார் என்ற செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் தொழிலதிபர் வசந்தகுமாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது

ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், ‘அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Leave a Reply