என்ன ஆச்சு திமுகவின் டெல்லி போராட்டம்?

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், டி.ராஜா, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆனால் முக்கிய கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டதாக தகவல் இல்லை. இருப்பினும் அனைத்துக்கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் அழைப்பை ஏற்று பங்கேற்ற கட்சிகளுக்கு நன்றி என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டம் ப.சிதம்பரம் கைது மற்றும் விசாரணை செய்திகளால் பரபரப்பின்றி முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply