என்னை பச்சை தமிழன் என கருணாநிதி கூறினார்: இரங்கல் தீர்மானத்தில் ஓபிஎஸ்

என்னை பச்சை தமிழன் என கருணாநிதி கூறினார்: இரங்கல் தீர்மானத்தில் ஓபிஎஸ்

தமிழக சட்டமன்றத்தில் இன்று கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியபோது அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அயராது உழைத்த கருணாநிதி, இன்று நம்மிடையே இல்லை. சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் மற்றும் சமூக நீதிக்காக போராடியவர்

பல பதவிகளை வகித்த கருணாநிதி, அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும், கருணாநிதி மீது கருத்து வேறுபாடு இருந்தாலும், கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தனர்

பச்சை தமிழர் பன்னீர்செல்வம் என கருணாநிதி கூறியது இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது

இவ்வாறு துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

Leave a Reply