என்னை நீ மறவாதிரு, புயல் காற்றிலும் பிரியாதிரு: நயன்தாரா படத்தின் பாடல்

என்னை நீ மறவாதிரு, புயல் காற்றிலும் பிரியாதிரு: நயன்தாரா படத்தின் பாடல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்றாகிய ‘ஐரா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் நேற்று இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது

மேகதூதம் என்று தொடங்கும் பாடலாசிரியை தாமரை எழுதிய இந்த பாடலில் என்னை நீ மறவாதிரு, புயல் காற்றிலும் பிரியாதிரு, போன்ற ஆழமான வரிகள் உள்ளதால் ரசிகர்கள் இந்த பாடலை கேட்டு ரசித்து வருகின்றனர்.

லட்சுமி என்ற குறும்படமும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கிய இந்த படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சுதர்ஷன் ஸ்ரீனிவாசனும் படத்தொகுப்பாளராக கார்த்திக் ஜோகேஷும் உள்ளனர்.

 

Leave a Reply