ஷிவானி நாராயணன்

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷிவானி நாராயணன் இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

மேலும் ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒரு தத்துவத்தை அவர் பொழிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இன்று அவர் ஷார்ட் மட்டும் பனியன் போன்ற கவர்ச்சியான உடையை அணிந்து அதில் என்னை சிரிக்க வைக்கும் ஒவ்வொருவரையும் நான் அன்பு செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்

இந்த புகைப்படத்தில் அவருடைய சிரிப்பு அட்டகாசமாக இருப்பதாகவும் அவருடைய சிரித்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது

ஷிவானி நாராயணன் விரைவில் பெரிய திரைக்கு வரவேற்பதாகவும் அவர் பெரிய திரைக்கு வந்தால் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி விடுவார் என்றும் அந்த அளவுக்கு அவரிடம் கவர்ச்சி மற்றும் நடிப்பு திறமை இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் தொலைக்காட்சியில் இருக்கும்போதே சிவானி நாராயணனுக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

//www.instagram.com/p/CC3L2VGFEZb/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *