என்னை அழைக்காமல் இருந்ததற்கு மகிழ்ச்சி: திருநாவுக்கரசர்

என்னை அழைக்காமல் இருந்ததற்கு மகிழ்ச்சி: திருநாவுக்கரசர்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் இறுதி நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் திமுக, அமமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே இந்த விழாவில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு விழாவில் அரசியல் கலந்திருப்பதால் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பழகிய தன்னைப் போன்றவர்களுக்கு, அவரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு என்னை அழைக்காத வரை சந்தோஷம் – என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர் , காங்கிரஸ், எம்ஜிஆர், ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published.