எனக்கு வீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கக்கன் வாரிசுக்கு வீடு கொடுங்கள்: நல்லகண்ணு

எனக்கு வீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கக்கன் வாரிசுக்கு வீடு கொடுங்கள்: நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை தி.நகரிலுள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் இருந்து வெளியேறி, கே.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் குடியேறியுள்ளார்.

சென்னை தி.நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்த வந்த வும் வசித்து வந்த நிலையில் அந்த இடத்தில் புதிய திட்டம் வருவதால் குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் தரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு மற்றவர்கள் வெளியேறியதுபோல் நல்லகண்ணுவும் வெளியேறியுள்ளார். அவரை போலவே கக்கன் வாரிசும் வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, ‘உடனடியாக வீடு காலி செய்யும்படி அரசு கேட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு வீடு இல்லை என்றாலும், கக்கன் வாரிசுகளுக்கு அரசு உடனடியாக வீடு வழங்க வேண்டும்; எனக்காக குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி

Leave a Reply