சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா என்பவர் தொற்று பாதித்த தனது கணவரை சிகிச்சை மையத்தில் அழைத்து சென்ற நிலையில், தனது வீடு தகரம் வைத்து அடைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, கொரொனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்த பகுதியில் தகரம் அடிக்கபடுவதற்கு என்ன காரணம்? என கேள்வி எழுப்பினர்.

எந்த விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கபடுகிறது என்றும், இந்த மனுவுக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது, மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை என நீதிபதி சத்தியநாராயணன் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *