எனக்கா? காயமா? அசால்ட்டாக பேட்டி அளித்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தின் படப்பிடிப்பிற்காக கர்நாடகாவில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு சென்றார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவருக்கு படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் வதந்திகள் பரவின

ஆனால் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது ’தனக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என்றும் சாதாரண முள் தான் குத்தியது என்றும் அசால்டாக பேட்டி எடுத்து விட்டு வீடு திரும்பினார்

ரஜினிகாந்த் நடித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த ஆவணப்படம் விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *