எந்த நாதாரிகளுக்கும் அருகதை கிடையாது: எஸ்.வி.சேகர் திட்டியது யார?

நாம் வணங்கும் தெய்வங்களுக்கு 100% நம்பிக்கையுடன் ராஜராஜ சோழன் போன்ற நாட்டை ஆண்ட மாமன்னர்கள் கோயில்கள் கட்டி பராமரித்து வந்துள்ளனர். அதன் வழிமுறையாக நடக்கும் ஆகம விதிகளை மாற்ற இறை நம்பிக்கை இல்லாத எந்த நாதாரிகளுக்கும் அருகதை கிடையாது என்று பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழரின் திராவிட கட்டடக் கலைப் பண்பாட்டுச் சின்னமாக, ஆயிரம் ஆண்டுகள் கடந்த பேரதியசமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், இதனை வலியுறுத்தி தஞ்சைப் பெரியகோவில் உரிமை மீட்புக்குழு நடத்தும் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

//twitter.com/SVESHEKHER/status/1219106694581501953

Leave a Reply