எது எப்படி என்றாலும் திமுகவுக்கு இது தோல்விதான்: தமிழிசை

வேலூர் மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தேர்தல் முடிவில் யார் வெற்றி பெற்றாலும் திமுகவுக்கு இது தோல்வி தான் என்றும் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பொய்ப்பிரச்சாரம் செய்து திமுக அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்றனர். ஆனால் இந்த முறை அவர்களின் வாக்கு சதவீதம் குறைந்துளது. எனவே திமுகவுக்கு இது தோல்விதான் என்று தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இன்னும் அதிமுகவினர் நம்பிக்கை இழக்க தேவையில்லை. அதிமுக வெற்றி பெற இன்னும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Leave a Reply