எதிர்பார்த்த நாடகம் அரங்கேறியதா? பெரியார் சிலை உடைப்பு

எதிர்பார்த்த நாடகம் அரங்கேறியதா? பெரியார் சிலை உடைப்பு

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ரஜினி – பெரியார் விவகாரம் பெரிதாகிக் கொண்டே இருக்கும் நிலையில் ரஜினிக்கு ஆதரவு பெருகி வருவது சமூக இணையதளத்தில் பதிவு செய்யப்படும் பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது

மேலும் அதிமுக அமைச்சர்கள் ஒருசிலரே தற்போது திடீர் திருப்பமாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வாக்குகள் பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் கடவுள் ஆதரவாளர்கள் என்று இரண்டாகப் பிரிந்து, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ரஜினியை ஆதரிக்க தொடங்கி விட்டதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்ய தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பெரியார் சிலை உடைப்பு என்ற நாடகம் நடைபெறும் என்றும் பெரியாரின் ஆதரவாளர்களே அந்த சிலையை உடைத்து விட்டு எதிர் தரப்பின் மீது பழி போட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில சமூக வலைதள பயனாளர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்தனர்

அவர்கள் கருத்து தெரிவித்தது போல் இன்று காஞ்சிபுரத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்த சாலவாக்கம் என்ற பகுதியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து எதிர்பார்த்த நாடகம் அரங்கேற்றி விட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது

Leave a Reply