எடப்பாடி பழனிச்சாமி டிஸ்மிஸ் செய்யப்படும்: எச்.ராஜா மிரட்டலால் பரபரப்பு

எடப்பாடி பழனிச்சாமி டிஸ்மிஸ் செய்யப்படும்: எச்.ராஜா மிரட்டலால் பரபரப்பு

சிஐஏ சட்டத்திற்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றினால் தமிழக சட்டமன்றம் டிஸ்மிஸ் செய்யப்படும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சிஏஏ சட்டத்திற்கு எதிராக சில மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் தீர்மானம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் இதே போல் தமிழக சட்டமன்றத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஆளும் அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை என்பதும் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்ற முடியாது என்று சமீபத்தில் சபாநாயகர் தனபால் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் சிஐஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யப்படும் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.