எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதல்வரா? அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதல்வரா? அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றதை அடுத்து அவர் உடனே சரண் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் முதல்வர் பதவிக்கு அவர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்துள்ளார்.

இதன்படி சற்றுமுன்னர் அதிமுக சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆட்சி அமைக்க அவர் கவர்னரிடம் உரிமை கோரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிமுகவின் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.