ஊழல்வாதிகளின் பெயர்களை விஜய்யால் சொல்ல முடியுமா?

ஊழல்வாதிகளின் பெயர்களை விஜய்யால் சொல்ல முடியுமா?

பெரிய நடிகர்களுக்கு வழக்கமாக வரும் அரசியல் ஆசை விஜய்க்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும், தற்போது ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத களத்தில் அரசியலில் நுழைய அவர் பெரும் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

சமீபத்தில் நடந்த ‘சர்கார்’ ஆடியோ விழாவில் அவருடைய பேச்சு பெரும்பாலும் அரசியலை நோக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஆனால் நடிக்க மாட்டேன் என கூறியது பெரிய மட்டத்தில் ஊழல் இல்லாமல் இருந்தால் தானாகவே ஊழல் மறைந்துவிடும் என்று கூறியது அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்தியது

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விஜய்யின் அரசியல் குறித்து குறிப்பிடும்போது, ‘நடிகர் விஜய் ஊழல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால் அவரை மாலை போட்டு வரவேற்பேன் என்றும் ஆனால் அனைவராலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவாக ஆக முடியாது என்றும் மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply