ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்: கமல்

ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்: கமல்

நடிகர் கமல்ஹாசனை சற்றுமுன்னர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். இருவரும் சுமார் ஒருமணி நேரம் தமிழக அரசியல் குறித்து ஆலோசனை செய்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது கமல் கூறியபோது, ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்களாக தெரிகின்றனர். கெஜ்ரிவால் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டதையே நான் பாக்கியமாக கருதுகிறேன். எனது தந்தை காலம் முதல்லே அரசியல் தொடர்புடையவன் நான்’ என்று கூறினார்.

பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியபோது, ‘கமல்ஹாசனுக்கு நடிகராகவும், நல்ல மனிதராகவும் நான் ரசிகன். நாட்டில் பெரும்பாலானோர் மதவாதத்திற்கு எதிரான கருத்து கொண்டுள்ளனர் என்று கூறினார்.

Leave a Reply