ஊரடங்கு நேரத்தில் காதலனை பார்க்க காரில் சென்ற நடிகை!

பெரும் பரபரப்பு

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை ஜெம்மா காலின்ஸ் என்பவர் ஊரடங்கு உத்தரவை மீறி தனது காதலனை பார்ப்பதற்காக காரில் பயணம் செய்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே தனது சகோதரர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த வார இறுதியில் அவர் தனது காதலரை பார்ப்பதற்காக தனது ரேஞ்ச் ரோவர் காரில் 30 கிலோமீட்டர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ள நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஜெம்மா காலின்ஸ் காரில் பயணம் செய்தது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.