ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று ஆலோசனை: கட்டுப்பாடுகளா? தளர்வுகளா?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இதனை அடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஊரடங்கை நீடிப்பது மற்றும் தளர்வுகள் கட்டுப்பாடுகள் அறிவிப்பது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

அதே நேரத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திரையரங்குகள் திறப்பது குறித்த அறிவிப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது