ஊரடங்கு நீட்டிப்பா? இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

mk stalin 1200

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 23ஆம் தேதி காலை ஆறு மணி விழா நிறைவடைகிறது.

இதனை அடுத்து ஊரடங்கு நீடிப்பது மற்றும் கட்டுப்பாடுகள், தளர்வுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது, பள்ளிகள் திறப்பது, திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது