ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை காரணமாக குழந்தைக்கு விஷம் கொடுத்து அந்த குழந்தையின் தாயே கொலை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விழுப்புரம் அருகே பாப்பான்குளம் என்ற பகுதியை சேர்ந்த சாதிக் பாட்சா- யாஷ்மின் தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக கடந்த 5 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது

இந்த குழந்தையை வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்ட யாஸ்மின் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அதில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்துள்ளார் இதனால் மறுநாள் காலை குழந்தை இறந்துள்ளது

இது குறித்து குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் யாஸ்மின் தான் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்

இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தையை வளர்க்க முடியாது என்பதற்காக பெற்ற குழந்தைக்கு விஷம் கொடுத்த தாயால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply