உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: சந்தேகம் கேட்ட திமுகவுக்கு பதிலடி கொடுத்த உச்சநீதிமன்றம்

உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: சந்தேகம் கேட்ட திமுகவுக்கு பதிலடி கொடுத்த உச்சநீதிமன்றம்

உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்று திமுக தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது

புதிய மாவட்டங்களின் தொகுதி மறு வரையறை பணிகள் முடிந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டுமென்பதே திமுகவின் கோரிக்கையாக இருந்தது

இதனை அடுத்து 9 மாவட்டங்கள் தவிர மீதி உள்ள மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது

இதனை அடுத்து தற்போது உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த சந்தேகங்கள் சிலவற்றை சுப்ரீம் கோர்ட்டில் திமுக தரப்பு முன்வைத்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் இதற்குமேல் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply