உள்ளாட்சி தேர்தல் குழப்பங்களில் சில….

உள்ளாட்சி தேர்தல் குழப்பங்களில் சில….

* திருச்செங்கோடு ஒன்றியத்தில் 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு!

* திருப்பரங்குன்றத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் இடத்தில் டேபிள் போடுவதில் சிக்கல், வாக்கு எண்ணிக்கை தாமதம்

* நாகையில் வாக்கு பெட்டிகளில் முகவர்கள் கையெழுத்து இல்லாததால் அதிர்ச்சி. * வாக்குப்பெட்டிகளை திறக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

* சேலம் ஓதியத்தூர் ஊராட்சியில் 1 மற்றும் 3வது வார்டு வாக்கு பெட்டிகளில் சீல் இல்லை எனக் கூறி வாக்குகளை எண்ண வேட்பாளர்கள் எதிர்ப்பு; வேட்பாளர்களின் எதிர்ப்பால் வாக்குச் சீட்டுகளை பிரிக்கும் பணி நிறுத்தம்

* விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முறையான உணவு வழங்கவில்லை எனக்கூறி வாக்கு எண்ணும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை

* திருப்பூர் அவினாசியில் வாக்கு எண்ணும் பணியை அலுவலர்கள் புறக்கணித்து தர்ணா, காலை உணவு வழங்காததால் புறகணிப்பு என தகவல்

Leave a Reply

Your email address will not be published.