உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் வரை இல்லை: அதிர்ச்சி தகவல்

உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் வரை இல்லை: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ஆம் தேதி வரை மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது

உள்ளாட்சி தேர்தல் குறித்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று இந்த அவகாசத்தை கேட்டுள்ளது. எனவே தமிழகத்தில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது

உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் மேலும் அவகாசம் கேட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டும், அப்போதுதான் மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் சரியாக போய் சேர வேண்டும் என கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

ஆனால் ஆளும் அதிமுக அரசு வேண்டுமென்றே உள்ளாட்சித் தேர்தலை தள்ளி போடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மீண்டும் அக்டோபர் மாதம் வரை அவகாசம் கேட்டுள்ளது எதிர்க்கட்சியினரின் சந்தேகத்தை உறுதி செய்வது போல் உள்ளது

Leave a Reply