உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவியும் 80 வயது பெண்ணும்!

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் முன்னனி நிலவரங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் இந்த தேர்தலில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவரும் 80 வயது முதிய பெண் ஒருவரும் வெற்றி பெற்றுள்ள செய்திகள் வெளிவந்துள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சி தேர்தலில் போட்டியிட்ட 20 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி என்பவர் வெற்றி பெற்றார். அவருக்கு சக மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

அதேபோல் மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 80 வயது வீரம்மாள் என்பவர் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply