உள்ளாட்சி தேர்தலின் இறுதி முடிவு: மாவட்ட சேர்மன் பதவிகள் அதிமுகவுக்கு 12, திமுகவுக்கு 13…

உள்ளாட்சி தேர்தலின் இறுதி முடிவு: மாவட்ட சேர்மன் பதவிகள் அதிமுகவுக்கு 12, திமுகவுக்கு 13…

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட வாக்கு எண்ணிக்கையை முடிவடையும் நிலையில் உள்ளது

இந்த நிலையில் மொத்தம் 27 மாவட்டங்களில் மாவட்ட சேர்மன் பதவியை பிடிக்க கட்சிகள் போட்டியிட்ட நிலையில் தற்போது 25 மாவட்ட சேர்மன் பதவிகளை பிடித்த கட்சிகள் குறித்த விபரம் வெளியாகி விட்டது

இதில் அதிமுக 12 மாவட்ட சேர்மன் பதவிகளையும் திமுக 13 மாவட்ட சேர்மன் பதவிகளையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதிமுக கைப்பற்றிய மாவட்ட சேர்மன் இடங்களில் தொகுதிகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு: சேலம், அரியலூர், கோவை, நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, தர்மபுரி, கரூர் மற்றும் கன்னியாகுமரி

திமுக கைப்பற்றியுள்ள மாவட்ட சேர்மன் இடங்களில் தொகுதிகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு: மதுரை, திருச்சி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை

கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்ட சேர்மன் பதவி இடங்களில் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையவில்லை என்பதும் இந்த இரண்டு தொகுதிகளிலும் இரு கட்சிகள் இடையே இழுபறி நீடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply