உளுந்தூர்பேட்டை அருகே சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்த ஒருவர் அந்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு உதயநிதி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

திருமணம் செய்ய மறுத்தார் என்பதற்காக உளுந்தூர்பேட்டை அருகே சரஸ்வதி எனும் இளம்பெண்ணை மூவர் சேர்ந்து கொலை செய்துள்ள வன்முறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை மிரட்டி மாற்றிவிடலாம் என நினைப்பதும், அதற்காக கொலை வரை செல்வதும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்

இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். சரஸ்வதியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு தருவதோடு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனி நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *