உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா:

பரபரப்பு தகவல்

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அமைப்பு உலக சுகாதார நிறுவனம். கொரோனா வைரஸ் பரவல் குறித்து உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை உலக சுகாதார அமைப்பு வெளியிடவில்லை என்று அமெரிக்கா சில மாதங்களாக குற்றஞ்சாட்டி வந்தது.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான நிதியை நிறுத்துவோம் என அமெரிக்கா சமீபத்தில் மிரட்டல் விடுத்த நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவுக்கு ஆதரவாகவே உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக அமெரிக்கா புகாரை முன்வைத்தது என்பதும் இந்த புகார்களை உலக சுகாதார அமைப்பு நிராகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply