உலக சினிமா வரலாற்றில் இதுதான் முதல் டைட்டில் கார்டு

உலக சினிமா வரலாற்றில் இதுதான் முதல் டைட்டில் கார்டு

உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக பெண்கள் பாதுகாப்பு குறித்து படம் ஆரம்பிக்கும் முன் டைட்டில் கார்டு போடும் பெருமையை தமிழ்ப்படம் ஒன்று பெற்றுள்ளது

இதுவரை திரைப்படம் தொடங்கும் முன்னர் புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது, மது அருந்துதல் உயிரை குடிக்கும் ஆகிய இரண்டு டைட்டில் கார்டுகள் மட்டுமே போடப்படும் என்பது தெரிந்ததே.

ஆனால் முதல்முறையாக சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ திரைப்படம் ஆரம்பிக்கும் முன் ‘பெண்களை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும்’ என்ற டைட்டில் கார்டு தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் காண்பிக்கப்படுகிறது. இந்த டைட்டில் கார்டை போட சென்சாரும் அனுமதியளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாருஹாசனுகு ஜோடியாக நடித்துள்ள சரோஜா, கீர்த்திசுரேஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 

1st Time in the History of World cinema history

Leave a Reply